Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் திரு.மதுபாலன், துணை மேயர் திருமதி.ஜெனிட்டா, மண்டல தலைவர் திருமதி.அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் திரு.கோட்டுராஜா, பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version