மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர்,காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் K.பெருமாள்சாமி தலைமையில் தூத்துக்குடி சிதம்பர நகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் T. ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் S. தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநில பேச்சாளர் பார்த்திபன், வக்கீல் பிரிவு பிரதிப் தினகரன், பிரேம்நாத், ராஜாராம், உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முதியோர்களுக்கு காலை உணவை வழங்கினர்.