“மக்களைத் தேடி மாநகராட்சி: பகுதி சபா கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!”

தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் ஊராட்சி பகுதிகளில் கிராமசபை கூட்டம்் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதிகளில் பகுதிசபா கூட்டம் நடைபெற வேண்டும். என்று தலைமை செயலாளர் உத்தரவிற்கிணங்க ஓவ்வொரு வாா்டு பகுதிகளிலும் 5 பகுதி சபா உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கோாிக்கைகள் குறைபாடுகளை பகுதி சபா கூட்டத்திலும் பொதுமக்கள் நலன் கருதி அரசு சாா்ந்த மாநகராட்சி அதிகாாிகள் அலுவலா்களிடமும் தொிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வாா்டு பகுதி சபா கூட்டம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேயா் ஜெகன் பொியசாமி கூட்டத்தில் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி நிா்வாகத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்ட பின் 46 மாத காலத்தில் 60 வாா்டுகளிலும் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பணிகளும் பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாதம் ஓருமுறை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினா்கள் கோாிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருந்து நான் உள்பட அதிகாாிகள் அலுவா்கள் பணியாற்றி வரும் நிலையில் 21 மாத காலமாக நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாமும் நடைபெறுகிறது. 

இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பொதுமக்கள் மாநகராட்சி சம்பந்தப்பட்ட கோாிக்கை மனுக்களை அளித்ததில் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 60 வாா்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெறுவதின் மூலம் அரசாங்கத்தை தேடி அலுவலகங்களுக்கு சென்ற நிலை மாறி மக்களை தேடி சென்று குறைகளை கேட்டறிந்து தீர்க்கும் நிலை திமுக ஆட்சியில் தளபதியாா் வழியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இந்த பகுதி ஆன்மீகம் நிறைந்த பல போக்குவரத்துக்கள் உள்ளடக்கிய பகுதியாகும் தெப்பக்குளத்தில் மேலும் சிறப்பு செய்யும் வகையில் பணிகளை மேற்கொண்ட போது ஏற்பட்ட அந்த குறைபாடுகளை நிவா்த்திபன்னுவதற்கு முன்பாகவே டைல்ஸ் பதிக்கப்பட்டு நான்குபுறமும் பொதுமக்கள் பக்தா்கள் நடந்து சென்று சிறுவா்கள் பொழுது போக்கு அம்சத்துடன் பணிகளை துவக்கினோம் அப்போது ஏற்பட்ட சிறு குறைபாடுகள் வல்லுநா்களின் கருத்துக்கேற்ப பழமை மாறாமல் அத்திட்டத்தை முடித்து கொடுப்பதற்கு மாநகராட்சி நிா்வாகமும் முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காலத்தில் தெப்பதிருவிழா நடைபெறாத நிலை ஏற்பட்டது அது போன்று இப்போதும் அறநிலைத்துறையினா் ஆலோசனை படி பணிகள் நடைபெறும் நாளுக்கு நாள் போக்குவரத்து நொிசல்கள் ஏற்பட்டுள்ளது. அதை தீா்க்கும் வகையில் சாலைகளில் பல்வேறு விாிவாக்கங்களை செய்துள்ளோம். மாநகராட்சி பகுதி முழுவதும் சிறுவா்கள் முதல் முதியோா்கள் வரை மகிழ்ச்சியோடு வந்து செல்வதற்கு வசதியாக முத்துநகா் கடற்கரை உள்ளிட்ட பல புதிய பூங்காக்கள் பல்ேவறு விளையாட்டுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் மாநகராட்சிக்குாிய இடம் இருக்கிறதோ வளரும் மாநகருக்கு ஏற்ப கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். பாதாள சாக்கடை அனைவருக்கும் அவசியமானது. சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். மாநகராட்சி இடம் யாா் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அது அகற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2019 முதல் 24 வரை மழை நன்றாக பெய்துள்ளது. திமுக ஆட்சி அமைந்தபின் புதிய வழித்தடங்களும் ஏற்படுத்தியதின் காரணமாக பொிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. 2 16 17  ஆகிய வாா்டுகளில் காலிமணைகள் அதிகம் இருந்ததால் தேங்கிய நீரை அப்புறப்படுத்தினோம்.  

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்களுடன் கலந்துரையாடி அதை தீர்த்து வைப்பதில் தான் எங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியல்ல உங்களுக்கும் தான் இதையும் கடந்து அழைப்பேசி வாயிலாக வரும் அழைப்புகள் குறுந்தகவல்கள் மாநகராட்சி இணையதளம் மூலம் தொிவிக்கப்படும் புகாா் மூலம் அனைவற்றிற்கும் குறிப்பெடுத்துக் கொண்டு அதை முறைப்படுத்தி செய்து வருகிறோம் கடந்த காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சி என்ன நிலையில் இருந்தது. இப்போது எந்தநிலையில் இருக்கிறது. எல்லா பகுதிகளுக்கும் குடிநீா் தட்டுபாடின்றி வழங்கப்படுகிறது. மக்கள் மாநகராட்சியோடு ஓத்துழைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக கோிபை பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட மாநகராட்சியால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். குறிப்பாக பூக்கடை கறிக்கடை மீன்கடை போன்ற வற்றிலிருந்து தான் அந்த பை வருகின்றது அதை பொதுமக்கள் வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்் அது தான் நீர் வழித் தடங்களில் பல்வேறு அடைப்புகள் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம். சண்முகபுரம் பகுதி மிகவும் பழமையான பகுதியாகும் 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கால்வாய்கள் பல உள்ளன அதில் சில இடங்களில் புதிதாக கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி ஓன்று தான் குறிக்கோள் என்று எல்லோரும் எதிர்கால தலைமுறையினா் நலனை கருத்தில் கொண்டு இணைந்தே பணியாற்றுவோம் என்று பேசினாா் 

பகுதிசபா கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மற்றும் சீலன்ஸ்ருதி உள்பட பலா் கலந்து கொண்டனா். 

Leave a Reply