தூத்துக்குடி,டிசம்பர்-6,
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
டிட்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து, வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான எல்சியு 51, 54, 57 ஆகிய மூன்று கப்பல்களில் சுமார் 300 டன் எடையுள்ள நிவாரண பொருட்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னா் அமைச்சா் கீதாஜீவன் கலெக்டா் இளம்பகவத் மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் கப்பலை முழுமையாக சுற்றிப்பாா்த்தனா்.
அமைச்சா் கீதாஜீவன் கூறுகையில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து மொத்தம் ரூ. 7,65,06,500 மதிப்பீட்டிலான பருப்பு வகைகள், சீனி, பால் பவுடர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தார்பாய்கள் உள்ளிட்ட 945 மெட்ரிக் டன் எடையுள்ள நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
உடன் கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, ஆணையர் ப்ரியங்கா, கோட்டாட்சியா் பிரபு, வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் போக்குவரத்து மேலாளர் விமல், ஐஎம்எஸ் கட்டபொம்மன் கடற்படை கம்ப்யூட்டர் அனில்குமார், தாசில்தாா் திருமணி ஸ்டாலின், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளா் அருணாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னதுரை, சிறுபான்மை அணி துைண அமைப்பாளா் நிக்கோலாஸ் மணி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மகளிா் அணி துணை அமைப்பாளா் சந்தனமாாி, கவுன்சிலா்கள் விஜயகுமார், ஜெயசீலி, பவானி, வைதேகி, நாகேஸ்வரி, ஆறுமுகம், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், கங்கா ராஜேஷ், பகுதி அணி அமைப்பாளா்கள் சூா்யா, செல்வம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன்பாண்டியன், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் உடனிருந்தனா்.