சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69ஆம் நினைவு தினம்:பாஜக.,சார்பில் மலர் தூவி மரியாதை!

தூத்துக்குடி,டிசம்பர்-6,

சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69ஆம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் மாசாணம் வாரியார் சிவராமன், ராஜேஷ், மண்டல் தலைவர்கள் லிங்க செல்வம், மாதவன், ராஜேஷ் கனி, சுதா, கிழக்கு மண்டல் பிரபாரி சத்தியசீலன், மருத்துவர் அணி மாநில செயலாளர் அரவிந்த், சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் காளிராஜா, அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் வெள்ளதாய், சின்ன தங்கம், வெங்கடேஷ், செந்தில், சங்கர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு படடியல் அணி மாவட்ட தலைவர் பெரியசாமி அவர்கள் செய்து இருந்தார்.
நிகழ்ச்சியில் தலைவர்கள் பேசும்போது,
“நீங்கள் கல்வி கற்றால், உலகம் உங்களை மதிக்கும்,”
“சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் — இவை மூன்றும் இல்லையெனில் ஜனநாயகம் உயிர் பெறாது,”
“தன்னை உயர்த்திக் கொள்ளும் சக்தி ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது,”
என அண்ணல் அம்பேத்கர் கூறிய முக்கியமான குறள்களை நினைவு கூர்ந்தனர்.
அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, கல்வி சக்தி, வாய்ப்புச் சமத்துவம் ஆகிய கொள்கைகள் காலம் கடந்தபோதிலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருப்பதாக அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அம்பேத்கர் சொல்லிய “நாடு முன்னேறவேண்டுமானால் முதலில் சமூகம் முன்னேற வேண்டும்” என்ற கருத்து இன்றும் பொருந்துகிறது என்றும் தெரிவித்தனர்.
அவரது சிந்தனைகளை இளைஞர்களிடையே பரப்புதல், பின்தங்கியோருக்கான வாய்ப்புகளை அதிகரித்தல், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகியவை அம்பேத்கருக்கு ஆற்றும் உண்மையான மரியாதை என பாஜக நிர்வாகிகள் கூறினர்.

Leave a Reply