பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்: வக்ஃப் உரிமையைக் காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,டிசம்பர்-6-

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதியையொட்டி, “வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் எஸ்டிபிஐ (SDPI) கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேட்டுப்பட்டி திடலில், மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் அலி ஃபைஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் கிண்டி அன்சாரி கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், திமுக வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் யூசுப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் கிதர் பிஸ்மி, தமிழக வெற்றிக் கழக மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அர்ஜுன், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கோல்டன் பரதர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் கௌது மைதீன், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் அஜீஸ், தொகுதி தலைவர் காதர் உசேன் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இறுதியாக தொகுதி துணைத் தலைவர் எடிசன் நன்றியுரையாற்ற, மாவட்ட துணைத் தலைவர் மைதீன்கனி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply