SIR வாக்காளர் படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடி,நவம்பர்-30,

SIR படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 11, 2025 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 4-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களின் வசதிக்காக இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் கூடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட தற்காலிக வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16, 2025 அன்று வெளியிடப்படும்.
இதைத் தொடர்ந்து, இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பைப் பயன்படுத்தி, வாக்காளர்கள் தங்களது SIR படிவங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply