வீடுகளில் மின் கட்டணத்தை குறைக்கும் “சோலார் பேனல்”; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கனிமொழி எம்பி.,

தூத்துக்குடி பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான சூரிய மேற்கூரை அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி சிதம்பரநகர் வணிக வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வடக்கு மண்டல அலுவலகம், தருவை மைதானம், குறிஞ்சிநகர் கரிசல் இலக்கிய பூங்கா ஆகிய 5 இடங்களில் நேற்று நடைபெற்றது.

குறிஞ்சி நகர் கரிசல் இலக்கிய பூங்கா அருகே நடைபெற்ற முகாமை கனிமொழி எம்.பி, அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர் க.இளம்பகவத், ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: எங்கள் வீடுகளிலும் சோலார் பேனல் அமைக்கப்பட்டு, அதன்வாயிலாக பயன்பெற்று வரும் பயனாளியாக பேசுகிறேன். எங்கள் வீடுகளில் சோலார் பேனல் அமைத்த பின்னர் மின் கட்டணம் மிகக்குறைந்த அளவிலேயே வருகிறது.எனவே, இத்திட்டம் உலகத்துக்கும், நாட்டுக்கும், அடுத்த தலைமுறைகள் மற்றும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. சோலார் பேனல் அமைப்பத ற்கான முதலீடு என்பது சில மாதங்களிலேயே நமக்கு திரும்ப கிடைத்துவிடும். எனவே, சோலார் பேனல் அமைத்தால் மின் கட்டணம் குறைந்து, லாபகரமானதாகவும் அமையும்.
பராமரிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இத்திட்டம் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களை www.pmsuryaghar. gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.’

Leave a Reply