தூத்துக்குடியில் சூரிய ஒளி மின்சாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சோலார் ரூஃப் டாப் அமைப்பு இணைந்து, தனசேகரன் நகர் பூங்காவில் மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு முகாம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி,மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply