தூத்துக்குடியில் கராத்தே சிறப்பு பயிற்சி!

தூத்துக்குடி,டிசம்பர்-10,

தூத்துக்குடி வி.இ ரோட்டில் அமைந்துள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டய தேர்வு 9:12:25 அன்று நடைபெற்றது .

இதில் கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ ஷோபுகாய் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஹோலிகிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி ரொசாரியோ சான்றிதழ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் கராத்தே பயிற்சியாளர்கள் மாரிமுத்து,மணிமுத்து, தனபால் ஆகியோர் உடனிருந்தனர் .

Leave a Reply