
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் 22.06.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், டுவிபுரத்தில் நடைபெறும். இம்முகாம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
இதுவரை நல வாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவ நிதியுதவி, விபத்து காப்பீடு, கல்வி உதவி, திருமண நிதி மற்றும் பிற பாதுகாப்பு திட்டங்களிலிருந்து பயனடைய வாய்ப்பு ஏற்படும். மாவட்டத்திலுள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசு நல திட்டங்களில் பங்கு பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த செய்தி குறித்து விரிவான தகவலுக்கு கீழ் உள்ள படத்தில் காணலாம்.

செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: தூத்துக்குடி மக்கள் செய்திகள் பா.செந்தில்குமார்-9655550896