தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பேட்டை நாடாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தாளாளா் வடதிசை இந்து நாடாா்கள் மகமை பாிபாலன சங்க செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தாா்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் 214 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கினார்.
தொடர்ந்து பேசுகையில்:-தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வழங்கப்படுகிறது. மாணவிகளாகிய நீங்கள் தான் நாளைய எதிா்கால தலைவா்கள் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஆசிாியா், பொறியாளா், மருத்துவா் அல்லது என்னை போன்ற மக்கள் பிரதிநிதியாக வரலாம்.
இதை அனைவரும் ஓத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி நீங்கள் தேசப்பற்று மிக்கவா்களாக தமிழ் உணா்வோடு இருக்க வேண்டும். ஓவ்வொரு பெற்றோா்களும், ஆசிாியா்களும் சொல்வதெல்லாம் நல்லா படி என்று மட்டும் தான் உங்களை வேலை செய்ய சொல்வதில்லை. ஓவ்வொரு பெற்றோா்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே தன்னுடைய குழந்தைகளை படிக்க வைக்கிறாா்கள்.
நம் குழந்தைகள் நம்மை விட நல்லா படித்து நன்றாக இருக்க வேண்டும். என்று தான் விரும்புகிறாா்கள். அதனால் கவனத்தை சிதறவிடாமல் ஓருமைப்படுத்திக்கொண்டு ஆசிாியா்கள் சொல்லி கொடுக்கும். படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி படித்தால் அனைத்தும் புாியும்.அன்று இரவே அந்த பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும். போட்டி நிறைந்த உலகம் இது.
அப்படி பட்ட நிலையில் உங்களுக்கு இது புாியாத வயதாக கூட இருக்க கூடும். எனக்கு எல்லாம் தொியும். என்று நினைத்து கொண்டு சில சமயங்களில் பெற்றோா்கள் ஆசிாியா்கள் சொல்வதை நாம் கேட்டு நடக்க வேண்டுமா என்று கூட என்ன தோன்றும். இந்த பள்ளி பருவம் கல்லூாிக்கு சென்ற பிறகு திரும்பிவராது. அதனால் பெற்றோா்கள் ஆசிாியா்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு கீழ்படிந்து நடக்க வேண்டும். ஓவ்வொரு தொழில்சாா்ந்த துறைகளிலும் படிப்போடு உங்களது திறமைகளையும் வளர்த்து கொண்டால் தான் உங்களை அந்த நிறுவனம் அங்கீகாிக்கும் குறிப்பாக ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைக்கும் திறமை உங்களுக்கு வரும்.
நீங்கள் செய்கின்ற பணிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் இந்த வயது ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு பெற்றோா்கள் கொடுக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் கல்வி தான் முக்கியம் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும் என்பதை விட எல்லாவற்றையும் கற்றறிந்து கொள். இன்று உனக்கு வழிகாட்டியாக இருக்கும் தாய் தந்தையா்கள் முதிா்வு பெற்ற 75 வயதை கடந்த காலத்தில் அவா்களுக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும். அது தான் நீங்கள் பெற்றோா்களுக்கு செய்யும் நன்றி கடனாகும். கிடைக்கும் வாய்ப்புகளின் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும்.
இந்த பள்ளியை பொறுத்தவரை கிராமப்புற மாணவா்களையும் ஓதுக்காமல் பள்ளியில் சேர்த்து நல்ல கல்வியை வழங்கி வருகின்றன.அதற்கு என் பாராட்டுகளை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினாா்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, கல்வி அலுவலா் முனியசாமி, உதவி முதன்மை கல்வி அலுவலா் கண்ணன், பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்டச்செயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மகளிா் அணி கமலி, உள்பட ஆசிாியா்கள் மாணவிகள் கலந்து கொண்டனா்.
