‘லெஜண்ட் 2’ இசை வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆலோசனை!

ரியல் ஹீரோ லெஜண்ட் சரவணனின் அகில இந்திய தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சிவா தலைமையில், ‘லெஜண்ட் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அகில இந்திய தலைவர் T. முத்துத்துரை வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்றப் பொறுப்பாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

‘லெஜண்ட் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது, ரசிகர் மன்றத்தின் மூலம் முன்னெடுக்கும் பணிகள் மற்றும் விழாவிற்குத் திரளாகச் சென்று ரியல் ஹீரோ லெஜண்ட் சரவணனுக்கு ஆதரவு அளிப்பது போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

லெஜண்ட் சரவணன் அடுத்த படமான ‘லெஜண்ட் 2’ குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவது குறித்துக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply