மாவீரர் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா:தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்,கவர்னகிரியில் உள்ள மாவீரர் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில், இன்று (16.04.2025) அவரது 255வது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் ஆணையின்படி மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்தின் வழிகாட்டுதலின் கீழ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அக்கட்சியினர் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணித்த மாவீரரை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply