தூத்துக்குடி, தூத்துக்குடி மறைமாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த விழா, மறைமாவட்ட முதன்மை குரு டோமினிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜீடு பால்ராஜ் திருவிழாக் கொடியை ஏற்றி, நிகழ்வைச் சிறப்பித்தார். அருட்தந்தை ராபின், அருட்தந்தை சந்தீஸ்டன், மற்றும் புதியம்புத்தூர் பங்குதந்தை ஆகியோரும் திருப்பலியில் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, வரும் 27-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நற்கருணை பவனியும், 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேரடி திருப்பலியும், அதனைத் தொடர்ந்து தேர்பவனியும் நடைபெற உள்ளன. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை எஸ்.வின்சென்ட் அடிகளார், உதவி பங்குத்தந்தை விவேக், கட்டளைகாரர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.