தூத்துக்குடி மாநகராட்சியில் களைகட்டிய விளையாட்டுப் போட்டி: மாமன்ற உறுப்பினர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை உற்சாகம்!

தூத்துக்குடி மாநகராட்சியில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து பங்கேற்ற மாபெரும் விளையாட்டுப் போட்டியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். ஒற்றுமையின் வெளிப்பாடாக நடைபெற்ற இப்போட்டியில் பல அணிகள் பங்கேற்று அசத்தின.போட்டியில் மத்திய அலுவலக அணி, நான்கு மண்டல அலுவலகங்கள் தனித்தனி அணிகளாகவும், மாமன்ற உறுப்பினர்கள் பெண்கள் அணி, ஆண்கள் அணி எனவும் பிரிந்து விளையாடினர். இது மாநகராட்சியின் அனைத்துப் பிரிவினரிடையே ஒரு சிறந்த நல்லுறவை வளர்க்கும் வகையில் அமைந்தது.

இதில் பெண்கள் அணியில் மகளிர் மாமன்ற உறுப்பினர்களை கொண்ட அணியானாது முதல் பரிசினையும், வடக்கு மண்டல மகளிர் அணியானது இரண்டாம் பரிசும் வென்றது, ஆண்கள் அணியில் வடக்கு மண்டல அலுவலக ஆண்கள் அணி முதல் பரிசினையும், மாநகராட்சி மத்திய அலுவலக ஆண்கள் அணி இரண்டாம் பரிசினையும் வென்றது.இந்த விளையாட்டுப் போட்டி, தூத்துக்குடி மாநகராட்சியின் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடையே ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

Leave a Reply