Site icon thoothukudipeople.com

மக்கள் கவனத்திற்கு!தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் புகார் அளிக்க ‘டோல் ஃப்ரீ’ எண் அறிவிப்பு!

தூத்துக்குடி,நவம்பர்-25,

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதி முழுவதும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் சூழற்சி முறையில் மழைநீர் தேங்கும் மற்றும் தேங்ககூடிய பகுதி என கருதப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் பாா்வையிட்டு வருகிறோம்.

மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது ஓடையிலும் வடிகால்களிலும் முழு அளவில் மழை நீர் சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகரைப் பொறுத்தவரை புறநகர் பகுதியில் இருந்து தற்போது வரை எந்த மழை நீரும் மாநகர பகுதிக்குள் வரவில்லை மேலும் மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரானது மழையின் அளவு குறைந்தவுடன் படிப்படியாக குறையும் தூத்துக்குடி மாநகர மக்கள் கட்டணமில்லா 18002030401 என்ற இந்த எண்ணில் மழை தொடர்பான புகார்களுக்கு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் அதே போல் எனது தொலைபேசிக்கும் எந்தநேரமும் தகவல் தொிவிக்கலாம். அதற்கேற்றாற்போல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் நலன் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தொடர்ந்து மாநகராட்சி அதிகாாிகளும் அலுவலா்களும் அந்தந்த பகுதி தோ்ந்ெதடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பணியாற்றி வருகின்றனா் என்று மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.

Exit mobile version