Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்:மே 10ம் தேதி தேரோட்டம்…

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதியுலா நடைபெற்றது. பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மூலஸ்தானம் முன்புள்ள கொடிமரத்தில் கலசக் கும்பங்கள் வைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடி ஏற்றம் நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 7ஆம் நாளான மே 7ம் தேதி சாமி, அம்பாள் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சப்பர் வீதியுலா வரவுள்ளர். அதே நாளின் இரவில் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் திருநாளான மே 8ம் தேதி, பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலாவாகி பக்தர்களை ஆசி தரவுள்ளனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் மகாகணபதி மற்றும் முருகப்பெருமான் சிறிய தேரில் எழுந்தருளி வீதியுலா வரவுள்ளனர். அதனைத் தொடர்ந்து, சுவாமி சங்கர ராமேஸ்வர பாகம் மற்றும் பெரிய அம்பாள் பெரிய தேரில் எழுந்தருளி பவனி வருவார்கள். திருவிழா நாட்களில் தினசரி நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த சித்திரைத் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துவருகிறது.

Exit mobile version