ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஜனனி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தூத்துக்குடியில் அனைத்து விஸ்வகர்ம சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் புலிவலம் கிராமத்தில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்த ஜகத்குமார் சங்கீதா ஆகியோரின் 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு மாணவியான ஜனனி காதலிக்க மறுத்த காரணத்தால் கடந்த மே 28ஆம் தேதி அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உறவினர் மகள் லட்ச்சியா என்ற பள்ளி மாணவியும் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் விஸ்வகர்மா சமுதாயத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு, அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
எனவே இந்த சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும், குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையுடன் தூத்துக்குடியில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வி வி டி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்ம சமுதாய மகாஜன பேரவை தலைவர் முருகேசன் ஆசாரி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் ஆச்சாரி,தூத்துக்குடி விஸ்வகர்மா கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் என்ற கிட்டு ஆசாரி, முன்னாள் நிர்வாக இயக்குனர் வசந்தகுமார், தூத்துக்குடி விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர்கள் பெருமாள் ஆச்சாரி, ஐயப்பன் ஆச்சாரி, சிவகாசியை சேர்ந்த மாரிக்கனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்ம சமூக மக்கள் கூட்டமைப்பு நிறுவனர் தேசிய பொதுச்செயலாளர் விஸ்வ பிரம்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி ஸ்ரீ சுவாமிகள் கண்டன எழுச்சி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஜனனியின் பெற்றோர்கள் ஜகத்குமார்,பிரியங்கா கலந்து கொண்டனர்
தமிழ்நாடு விஸ்வகர்மா பேரியக்க பொதுச்செயலாளர் ஆர் எஸ் எம் மூர்த்தி, கோவில்பட்டி விஸ்வகர்மா மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு விஸ்வகர்மா பேரியக்க மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி விஸ்வகர்மா தொழிலாளர் சங்க தலைவர் மாடசாமி, கோவில்பட்டி விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்க தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
மாணவியை படுகொலை செய்த கொலையாளிக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் ஒரு குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:
தூத்துக்குடி மக்கள் நாளிதழ் 9655550896,0461-79600296