Site icon thoothukudipeople.com

அதிமுக – பாஜகவுடன் கைகோர்த்தது பாமக: எடப்பாடி – அன்புமணி அதிரடி அறிவிப்பு!”

தமிழக அரசியலில் நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இன்று வருகை தந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கூட்டணி குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:”அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அங்கம் வகிக்கிறது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சியும் எங்களது கூட்டணியில் இணைந்துள்ளது. இது மிகவும் இயற்கையாக அமைந்த ஒரு கூட்டணியாகும். தொகுதிப் பங்கீடு குறித்து சுமுகமாகப் பேசி முடிவு செய்துவிட்டோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
கூட்டணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:இந்தத் தருணம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.எங்களது கட்சித் தொண்டர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு கூட்டணி தற்போது இணைந்துள்ளது.வரும் தேர்தலில் இந்த மெகா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.

Exit mobile version