தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சமீபத்திய மழையினால் தேங்கிய நீர் மற்றும் அதன் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த மேயர்,மழைநீர் வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வட்டக் கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ஜான் சீனிவாசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.