தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது கட்சியினர் மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.அந்தவகையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்து அவர்களுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரசவ வார்டில் உள்ள தாய்மார்களுக்குப் போர்வை மற்றும் பழங்களை வழங்கினார். மேலும், அரசு மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆதரவற்றவர்களுக்குக் காலை உணவையும் வழங்கி, தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை கொண்டாடினர்.
செய்தி மற்றும் விளம்பரத்தொடர்புக்கு:பா.செந்தில்குமார் 9655550896