தூத்துக்குடி,டிசம்பர்-6-
தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 6) அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில், அரசியல் சாசன ஆசான் அம்பேத்கரின் புகழ் பாடப்பட்டதுடன், “பாசிசத்தை வேரறுக்கும் பதிவையும் பதிவு செய்தோம்” என அக்கட்சியினர் உறுதியேற்றனர்.

இந்த நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் NA கிதர் பிஸ்மி தலைமையில், மாவட்ட தலைவர் சாம்சன், மாவட்ட ஊடகப் பிரிவு அஜ்மல், மீனவ அணி தலைவர் செல்வகுமார், மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி, மகளிர் அணி செயலாளர் வேலம்மாள், மாநகர மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.