தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த இரண்டு மினி பஸ்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்திய நான்கு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் கொண்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வந்த புகார்களின் அடிப்படையில், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்றி, நான்கு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்காமல், அதிக கட்டணம் வசூலித்த இரண்டு மினி பஸ்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-
தூத்துக்குடி மக்கள் செய்திகள்:
PH-97896-25946,0461-7960026.