“ஆண்ட பரம்பரை என்பது பெருமை இல்லை; படித்து பதவியிலேறுவதே பெருமை”–காவல் உதவி ஆணையரின் பேச்சு வைரல்..!

திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையர் வினோத் சாந்தாராம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்த்திய விழிப்புணர்வு பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தென் தமிழகத்தில் சமீப காலமாக, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே, சாதி மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களிடம் புத்தகங்களுக்குப் பதிலாக ஆயுதங்கள் காணப்படுவது கவலையைக் கிளப்புகிறது. இந்த நிலையில், “நாங்கள் ஆண்ட பரம்பரை” என சில சமுதாயத்தினர் பெருமை பேசும் சூழலில், காவல் அதிகாரி வினோத் சாந்தாராம் நிகழ்த்திய விழிப்புணர்வு பேச்சு அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது.

அவரது பேச்சில் “திரும்பத் திரும்ப ஆண்ட பரம்பரை என சிலர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆண்ட பரம்பரை எல்லாம் கிடையாது, அது கானாமல் போய் விட்டது. யார் படித்து பதவியில் அமர்கிறார்களோ அவர்கள் தான் ஆண்ட பரம்பரை. படித்துவிட்டு பதவியில் உட்காருபவர்கள் தான் ஆண்ட பரம்பரை.என்னுடைய தாத்தா இந்த மாவட்டத்தின் கலெக்டர், என்னுடைய தாத்தா இந்த மாவட்டத்தில் எஸ்பி என்று சொல்பவர்கள் தான் ஆண்ட பரம்பரையாக இருக்க முடியும். வெறும் பழம் பெருமையை பேசிக்கொண்டு யாரோ சம்பாதித்த சொத்துக்கு ஆசைப்படுவது எல்லாம் பெருமை கிடையாது. எனவே அந்த தைரியம் நம்மிடம் இருக்க வேண்டும் நாம் படிக்க வேண்டும் நாம் பெரிய பதவிக்கு செல்ல வேண்டும்” என்று விழிப்புணர்வோடு பேசினார்.இந்த உரை சமூக வலைதளங்களில் பரவியதோடு, பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply