போதையில்லா தமிழகம் நோக்கி இளைஞர்கள் முன்னேற வேண்டும்–வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!

தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தவிர்த்து, எதிர்காலத்தில் உயர்ந்த இலக்குகளை அடைய முனைவது மிக முக்கியம் என வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ” இளைஞர்கள் சமூக பொறுப்புகளை உணர்ந்து, பொதுமக்களுக்கு தொண்டாற்றும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.மேலும், “வருங்காலம் இளைஞர்களின் காலம்” என்பதை மனதில் வைத்து, போதையில்லா தமிழகம் உருவாக இளைஞர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply