தூத்துக்குடி வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து எல்லா தரப்பினரும் தங்களது பகுதியில் உள்ள கோாிக்கைகளை மனுவாகவும் நோில் வழங்கி கோாிக்கை தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் 39 வது வார்டுக்குட்பட்ட வடக்கு ரத வீதி, ராஜ பிள்ளை சந்து அடங்கிய சில பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நோில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோாிக்கை மனு அளித்தனா். இதனையடுத்து அப்பகுதியை நோில் சென்று பாா்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.அப்போது பொதுமக்கள் தங்களுடைய பகுதிக்கு 11 மாதமாக சாலை வசதி அமைக்கப்படவில்லை. அதனால் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் கூறினார்கள். அப்போது பொதுமக்களிடம் குடிநீர் பைப் லைன் பதிக்கப்பட்ட காரணத்தினால் சாலைகள் அமைக்கப்படவில்லை. பணிகள் உடனடியாக துவங்கப்பட்டு மூன்று தினங்களுக்குள் ராஜபிள்ளை சந்து சாலை பணி முடிவடைந்து விடும் பொங்கல் பண்டிகை நீங்கள் கோலமிட்டு உற்சாகத்துடன் குடும்பத்துடன் கொண்டாடலாம் என்று பொதுமக்களிடம் கூறினார். அதற்கு பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு நிறைய செய்துஉள்ளீர்கள் அதற்கு நன்றி. இந்த சாலையும் அமைத்து விட்டீர்கள் என்றால் ரொம்ப சந்தோசம் என்று கூறினார்கள். அதன் பிறகு மின்விளக்கு வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தனர் உடனடியாக மின்விளக்கு பொருத்தப்படும் என்று கூறினார். அதன் பின்பு வடக்கு ரதவீதியில் ஒவ்வொரு பகுதியாக சென்று பணிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு இருந்தார். அதன் பிறகு 42 வது வார்டுக்கு உட்பட்ட பனங்காடு பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. சுமார் 40 ஆண்டு காலமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பொதுமக்களின் வசதிக்காக அங்கு சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்விளக்குகள் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். அதன் பிறகு பொதுமக்கள் மற்றொரு கோரிக்கையான புல் தோட்டம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா சிதைந்துள்ளது என்று கோரிக்கை வைத்திருந்தனர். உடனடியாக அங்கு சென்று புல் தோட்டம் பூங்காவை பார்வையிட்டு சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்திருந்தது உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்காவை சுத்தமாக பராமரிக்க வேண்டும் சமூக விரோத செயல்கள் நடக்க அனுமதிக்க கூடாது மாநகராட்சி சார்பில் உருவாக்கப்படுகின்ற பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் தவறுகள் நடக்குமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கு இருந்த பணியாளரிடம் கூறினார். மூன்று மணி நேரம் பல்வேறு வாா்டுகளில் மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று கோரிக்கை வைத்த 12 மணி நேரத்தில் நேரில் சென்று மூன்று மணி நேரம் ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அதற்கு பொதுமக்கள் மிகவும் நன்றி தெரிவித்தனர். பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளா் ரவீந்திரன், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனா்.

