தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடையைச் சீரமைக்கக் கோரியும், புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தியும் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22, 2025) அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையான இந்தக் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் பேரூராட்சி தலைவரிடம் இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில், ரேஷன் கடையின் மேல் போடப்பட்டிருந்த மரப்பலகையில் கால் வைத்து வர்த்தக சங்கத் தலைவரே கீழே விழுந்த சம்பவம், கட்டிடத்தின் அபாயகரமான நிலையை உணர்த்துகிறது. பொதுமக்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் பேரூராட்சிக் கண்டித்து, வரும் செவ்வாய்க்கிழமை, பழுதடைந்த ரேஷன் கடை முன்பு, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் வார்டு மக்கள் அனைவரையும் திரட்டி அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள,
தூத்துக்குடி மக்கள் செய்திகள் WhatsApp சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்!
சேனலில் இணைய, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46