தூத்துக்குடி மாநகரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தி, பாரம்பரியம், கலாச்சார அடையாளமாக நடைபெற்று வரும் தெப்பக்குள தெப்பத் திருவிழாவை, இந்த ஆண்டு நடத்த மறுப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

தெப்பக்குளம் பழுதடைந்துள்ளதாகக் காரணம் காட்டி, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான தெப்பத் திருவிழாவை ரத்து செய்ய முயல்வது, பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளையும் நம்பிக்கையையும் புறக்கணிக்கும் செயலாகும். தெப்பக்குளத்தின் பராமரிப்பு, சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டியது இந்து சமய அறநிலைத்துறை கடமையாகும்.
அறநிலையத்துறை என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறோம்” என கூறி பொறுப்பிலிருந்து மாநகராட்சி நிர்வாகம் தப்பிக்க முயல்வது கபட நாடகமாகவே பார்க்கப்படுகிறது.தைப்பூச தெப்பத் திருவிழா என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல; அது தூத்துக்குடி மக்களின் ஆன்மிக வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த மரபு. இந்து சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளையும், பாரம்பரிய திருவிழாக்களையும் அலட்சியப்படுத்தும் போக்கு தொடர்ந்து காணப்படுவது மிகவும் கவலைக்குரியது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில்,
தெப்பக்குளத்தை உடனடியாக சீரமைத்து தேவையான பாதுகாப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்து இந்த ஆண்டுக்கான தைப்பூச தெப்பத் திருவிழாவை கட்டாயம் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையும், தூத்துக்குடி மாநகராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து சமய அறநிலை துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
பக்தர்களின் நம்பிக்கையை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தெப்பத் திருவிழாவை நடத்தத் தவறினால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதில் மாநில ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, கிழக்கு மண்டல் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மண்டல செயலாளர் ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவர் உஷா தேவி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிதலீஸ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
