சம்சுதீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி ஊராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கா.கருணாநிதி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் ஸ்வர்ணலதா, கிளை மேலாளர் (சிட்கோ திருநெல்வேலி) சத்யராஜ், வட்டாட்சியர்கள் சண்முகபெருமாள் (கோவில்பட்டி), சுபா (எட்டயபுரம்), அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து காெண்டனர்.