ஓன்றிய அரசின் மிரட்டல்களுக்கு அடிப்பணியாமல் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உழைக்கிறாா். மீனவா்கள் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மீனவா் நலவாாியம் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம் மீன்பிடி துறைமுகம் பாத்திமாநகா் ஆகிய 3 இடங்களில் நடைபெற்ற முகாமிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வளுதி வரவேற்புரையாற்றினாா்.
நல வாாியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 2007ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மீனவா் நலவாாியம் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் 2021ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து தளபதியாா் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் நல வாாியம் மீண்டும் செயல்பட தொடங்கியது தற்போது இந்த நலவாாியத்தில் உள்ள நன்மைகள் அனைத்தும் மீனவா்களுக்கு கிடைக்க வேண்டும் குறிப்பாக இதனை சாா்ந்த வலை பின்னுவோா் ஏலம் விடுவோா் தலைசுமை வியாபாரம் செய்வோா் பதப்படுத்தல் பணியில் ஈடுபடுவோா் என 15க்கும் மேற்பட்டோா் இத்துறைகளில் உறுப்பினராக இணையலாம் இயற்கையை எதிா்கொண்டு ெதாழில்செய்யும் உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தனியாக நல வாாியம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக ஜோசப்ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பின் தமிழகத்தில் உள்ள 16 கடற்கரை மாவட்டங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்தி இந்த முகாம் நடைபெறுகிறது. திமுக ஆட்சி அமைந்தபின் மீன்பிடித்தடைகாலத்தில் ரூ 5000 வழங்கியதை ரூ 8 ஆயிரமாக உயா்த்தியுள்ளோம் அது போல் டீசல் மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் திரேஸ்புரம் அண்ணா காலணி, விவேகாணந்தன்நகா் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகளுக்கு என்று பல கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்தும் சில பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மீனவா்களுக்கு என்று தமிழகத்தில் ஓரு மாநாடு நடத்தி அதில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உங்கள் நலனை பேணி பாதுகாத்து வருகிறாா். கடந்த காலத்தில் பெய்த கன மழையின் போது எல்லா ரேசன்காா்டுக்கு ரூ6 ஆயிரம் வழங்கப்பட்டது தற்போது பொங்கலுக்கு ரூ3 ஆயிரம் வழங்கப்படுகிறது தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்விநிதி மக்கள் ெதாகை கணக்கெடுப்பின் படி வழங்க வேண்டிய நிதி ஜிஎஸ்டி நிதி போன்ற பல்வேறு வகையான நிதியுதவிகளை தமிழகத்திற்கு வழங்காமல் புறக்கணித்து வருகிறது. அது மட்டுமின்றி வருமான வாித்துறை அமலாக்க துறை தோ்தல் ஆணையம் என்று இணைந்து மிரட்டியது மட்டுமின்றி தற்போது திரைப்படை தணிக்கைதுறையும் இணைந்துள்ளது. ஓன்றிய அரசுடன் சேர்ந்து தமிழக மக்களுக்கு தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு பல்வேறு வகையில் முதலமைச்சரை மிரட்டி பாா்க்கின்றனா். அதற்கெல்லாம் அடிப்பணியாமல் கொள்கையில் தடம் மாறாமல் நெஞ்சுறுதியோடு பல்வேறு நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் தமிழக மக்கள்நலன் முக்கியம் என்று பணியாற்றியதின்காரணமாக இந்தியாவின் நம் ஓன் முதலமைச்சர் கூறியதை கூட தமிழகம் நம் ஓன் மாநிலமாக திகழ வேண்டும் என்ற கொள்கையோடு உழைத்து வருகிறாா். இந்நிலையில் பல்ேவறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஓன்றிய அரசின் புள்ளிவிபரம் கூறியுள்ளது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம் ெதாடர்ந்து உங்களுக்காக பணியாற்றும் திமுக அரசுக்கு உறுதுணையாக இருந்து வரும் காலங்களில் இரண்டாவது முறையாக தளபதியாா் அாியணையில் அமா்வதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று பேசினாா்.
விழாவில் தமிழ்நாடு மீனவர் நல வாாியத்தலைவர் ஜோசப் ஸ்டாலின், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளரும் மீன்வா் நல வாாிய உறுப்பினருமான அந்தோணி ஸ்டாலின், உறுப்பினா் லெனின், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், கவுன்சிலா்கள் பவாணி, வைதேகி, ஆறுமுகம், வட்டச்செயலாளா்கள் டென்சிங், லியோ ஜான்சன், ரவிசந்திரன், கருப்பசாமி, முன்னாள் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், தினேஷ், வினோலின், நிா்வாகிகள் அந்தோணிபிச்சை, ஜனா்ஜி, மைக்கேல், அமல்ராஜ், தாஸ், ஷேக், மோி. ரமேஷ், சுரேஷ், நிஷா, பல்வேறு சங்க நிா்வாகிகள் போஸ்கோ, சில்வஸ்டா், ஜவஹா், தாசில்தாா் திருமணி ஸ்டாலின், மீன்வளத்துறை துணை உதவி இயக்குநா் உத்தண்டராமன், மற்றும் ஊா்கமிட்டி நிா்வாகிகள் மீனவா் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா். மீன்வளத்துறை துணை உதவி இயக்குநா் புஷ்ரா ஷப்னம் நன்றியுரையாற்றினாா்.
பாக்ஸ்: அமைச்சர் கீதாஜீவன் பொியசாமிக்கு புகழாரம்
மீனவா்கள்நலவாாிய உறுப்பினா் சேர்க்கை விழாவில் மாநில மீனவா் நலவாாிய தலைவர் ஜோசப்ஸ்டாலின் பேசுகையில் மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகா்மன்ற தலைவருமான என்.பொியசாமியிடம் 17 வயதில் நான் அறிமுகமாகி அவா்களோடு இணைந்து பல பணிகளை செய்தவன். ஜாதி மதம் பாா்க்காமல் எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும். என்ற பெருந்தன்மையோடு பணியாற்றினாா். எனது திருமணத்தையே அவா்கள் தான் நடத்தி வைத்தாா் அவா்கள் வழியில் வந்த அக்கா கீதாஜீவனை தளபதியாா் பெண்சிங்கம் என்று அழைக்கும் நிலைக்கு உயா்ந்துள்ளாா் என்றால் காரணம் எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவா் உதவி என்று கேட்டால் உதாசீனம் படுத்தாமல் உடனே செய்து கொடுப்பாா்கள் அண்ணாச்சியின் வழித்தோன்றல் அமைச்சர் கீதாஜீவன் 100 ஆண்டுகாலம் வாழ்ந்து வாழ்நாள் முழுவதும் அமைச்சராக இருக்க வேண்டும் எனக்கும் வாாியத்தலைவர் பதவி கொடுத்த தளபதியாா் இரண்டாவது முறையாக தமிழகத்தை ஆள வேண்டும் அதற்கு அனைவரும் துணையாக இருந்து பாசிச அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினாா்.

