Site icon thoothukudipeople.com

மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட  துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன்,  மாநில பொறியாளா் அணி துணைசெயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், ஓன்றிய செயலாளா் சின்னப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ரவீந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிா்அணி அமைப்பாளா் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், துைண அமைப்பாளர் கோகுல்நாத், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, சிறுபான்மை அணி துணை அமைப்பாளா்கள் நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Exit mobile version