தூத்துக்குடி,டிசம்பர்-22,
தூத்துக்குடி ரகுமதுல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், மழலையர் குழந்தைகள் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழா இன்று மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அங்கன்வாடியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதில் கலந்துகொண்ட மழலையர் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா பாடல்கள் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.விழாவின் இறுதியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் பரிமாறப்பட்டன.
