தூத்துக்குடி,டிசம்பர்-21,
தூத்துக்குடி புனித லூர்து அன்னை கிளைச்சபையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தூத்துக்குடி கிறிஸ்தவா்களின் முக்கிய திருவிழாவான கிறிஸ்துமஸ் விழா அனைத்து ஆலயங்கள் மற்றும் சபைகளில் கொண்டாப்படுவது வழக்கமான திருவிழாவாகும்.
இதனையொட்டி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை கிளைச்சபையின் 23வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா பங்குத்தந்தை செல்வன் தலைமையில் 20 சுவீகார குடும்பம் உள்பட மொத்தம் 54 நபர்களுக்கு ரூ.70000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னா் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
விழாவில் மத்திய சபைத்தலைவர் சகோதரர் ஜுட்ரன், வட்டார சபைத்தலைவர் சகோதரர் மைக்கேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

