ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் தூத்துக்குடி மாநகரில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் யூசுப் கலந்துகொண்டு, ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்.இந்நிகழ்விற்கு மமக மாநில பிரதிநிதியும், மாவட்ட பொறுப்பாளருமான ஆசாத் தலைமை தாங்கினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். இதில் தமுமுக மாவட்ட செயலாளர் பரகத்துல்லா, மமக மாவட்ட துணைச் செயலாளர் பிரிவின், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் (SMI) மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நாசர், மாநகரத் தலைவர் ஷேக் மைதீன், மாநகர மமக செயலாளர் ஷேக் ஜான் ராஜா, மாநகரப் பொருளாளர் யூனுஸ் மற்றும் உடன்குடி நகரச் செயலாளர் ஹாலித் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
