தூத்துக்குடி,நவம்பர்-15,
தூத்துக்குடிக்கு குடிநீர் வசதியை அளித்தவரும், ‘நகர தந்தை’ எனப் போற்றப்படுபவருமான ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. (INTUC) மாநிலப் பொதுச் செயலாளரும், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமான க. பெருமாள் சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டலத் தலைவர் தங்கராஜ், பழங்குடியினர் பிரிவு மாநிலச் செயலாளர் முனியசாமி, மாவட்டப் பொதுச் செயலாளர் இக்னேஷியஸ், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி உமா மகேஸ்வரி உட்பட ரூஸ்வெல்ட், சிவராஜ் மோகன், ராஜாராம், மனோகரன், வழக்கறிஞர்கள், ஐ.என்.டி.யு.சி. மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரசைச் சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமான தேசியத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
மரியாதை செலுத்திய பின்னர், இந்தச் சந்தர்ப்பத்தில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஐயா குரூஸ் பர்னாந்துவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக காங்கிரஸ் பிரமுகர் பெருமாள் சாமி தெரிவித்தார்.

