Site icon thoothukudipeople.com

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….! 

சென்னை கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

1.திராவிட மாடல் அரசின் 5ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற, இந்தியாவிற்கே ரோல் மாடலாக செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு. 2.’நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் 1244 இடங்களில் கூட்டங்கள். 3. 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். அவரை சட்டமன்றத்துக்கு தகுதி உள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்கள் கடமை.
4.கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றிக்குக் காரணம் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான்.
5.அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிட மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள் என்பன உட்பட முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Exit mobile version