தூத்துக்குடி சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) மாவட்ட பொதுக்குழு கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் தலைமை பிரதிநிதி S. ஆசாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அபுல்ஹசன் இறைவசனம் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் A. யூசுப் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோசப் நொலஸ்கோ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பழைய மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:
மாவட்டத் தலைவர் (தமுமுக & மமக) கயத்தார் அஸ்மத் உசேன்,மாவட்டச் செயலாளர் (மமக A. யூசுப்,மாவட்டச் செயலாளர் (தமுமுக) பரக்கத்துல்லா,
மாவட்டப் பொருளாளர் (தமுமுக & மமக ஐத்ருஸ், தமுமுக துணை செயலாளர்கள் செய்யது அலி, முஹம்மது ரஃபீக், பீர் மைதீன், ஜபருல்லா,
மமக மாவட்ட துணை செயலாளர்கள் செண்பகராஜ், பிரவீன்,மாவட்ட அணி செயலாளர்கள் சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் அலியார்
இளைஞர் அணி சம்சுதீன், தொண்டர் அணி தாரிக், சமூக நீதி மாணவர் இயக்கம் (SMI) யாசர் அரபாத் (சேட்), ஊடக பிரிவு ஆபித்,மனிதநேய தொழிற்சங்கம்(MTS) ஆசாத், இஸ்லாமிய பிரச்சார பேரவை(IPP) அப்துல் ரஹீம் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர் .

