Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா:சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மரியாதை

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், சமூக நீதி முன்னோடி டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாவட்ட துணைச் செயலாளர் சூசைமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், பொருளாளர் பழனிவேல், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகிகள் அருள்ராஜ், வக்கீல் சகாயராஜ், முத்து செல்வம், சங்கர், சிவசு முத்துக்குமார், உதயசூரியன், குருவம்மாள், சந்திரா, ஜேசுசெல்வி, ராசாத்தி கன்னியம்மாள், மதியழகன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Exit mobile version