நிருபர்,யா.சம்சுதீன்.
இந்திய அரசியலமைப்பின் வடிவமைப்பாளர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் சாதனைகளையும், சமத்துவத்திற்காக அவர் செய்த பெரும் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.