Site icon thoothukudipeople.com

“கழிவு நீரால் சீரழிந்த புனிதம்!” – தூத்துக்குடி தெப்பக்குள விவகாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கொந்தளிப்பு!

தூத்துக்குடி,டிசம்பர்-12,

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த வேலையில் புதன்இரவு நடைமேடை திடீரென்று விரிசல் ஏற்பட்டு சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்தது இது இருபுறமும் நடந்தது இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனையடுத்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லபாண்டியன் தெப்பக்குளத்தை சுற்றி ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில்: தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளம் பல நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் தெப்பத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் 50 வருடத்திற்கு முன்பு இந்த தெப்பக்குளம் தண்ணீர் சுத்தமாக இருக்கும் இந்த திமுக ஆட்சியாளர்களால் தெப்பக்குளம் சீரழிக்கப்பட்டுள்ளது. இதில் தெப்பக்குளத்தில் நீரூற்று உண்டு கோரம்பள்ளம் குளத்தில் இருந்து தண்ணீர் வரும் பாதை உள்ளது. மழை நேரத்தில் தெப்பக்குளத்தில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தியது தவறு இதில் ஒரு கிணறு இருந்தது அந்த கிணறை மூடிவிட்டார்கள் அதுவும் தவறான செயலாகும். தூத்துக்குடி மாநகரத்துக்கு இது ஒரு சாபக்கேடாகும்.

தற்போது கான்கிரீட் போடும் பணி நடைபெறுகிறது அதுவும் தவறான செயலாகும் தெப்பக்குளத்திற்குகழிவு நீர் செல்லும் வகையில் தெப்பக்குளத்தில் இணைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாநகரத்தின் பெரிய தெப்பக்குளம் இதுதான். இருப்பதே ஒரே தெப்பக்குளம் தான் இதில் கழிவு நீர் கலப்பது இது முற்றிலும் தவறான செயலாகும் தமிழகத்திலேயே ஒரு தவறுதலான ஆட்சி நடைபெறுகிறது. அதே நிலைமைதான் தற்போது தூத்துக்குடி மாநகரில் இந்த தெப்பத் திருவிழா கழிவு நீரால் சீரழிகிறது அடுத்த மாதம் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. அதுக்கு முன்பு அனைத்து வசதிகளும் சீரமைப்பு பணிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்க வேண்டும். இந்த ஆட்சியில் புனிதம் கெட்டுப் போய்விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கூறினார்.
உடன் மாநில வா்த்தக அணி துணை செயலாளர் மில்லை ராஜா, முன்னாள் நகா்மன்ற தலைவர் மனோஜ்குமாா், முன்னாள் கவுன்சிலா்கள் அகஸ்டின் எட்வின்பாண்டியன் வடக்கு மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், சிறுபான்மை பிாிவு தலைவர் அசன், போக்குவரத்து தொழிற்சங்க நிா்வாகிகள் சங்கா், பேச்சிமுத்து, மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனா்.

Exit mobile version