Site icon thoothukudipeople.com

பழமை மாறாமல் புதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி தெப்பக்குளம்: மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் இந்துசமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் பெருமாள் கோவில், முத்தாரம்மன் கோவில், கீழுா் பத்திரகாளியம்மன் கோவில், மாாியம்மன்கோவில் சிவன்கோவில் உள்ளிடங்கிய ஆன்மீக தலம் நிறைந்த பகுதியில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் சிவன்கோவில் மேற்பார்வையில் உள்ள தெப்பக்குளம் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெப்பக்குளம் கட்டப்பட்டு சுமாா் 140 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாத காரணத்தினால் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும். நவீன முறையில் புதுப்பிக்க வேண்டும் என்று தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும ஆன்மீக அன்பா்கள் சாா்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். 

அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி அதுபோல சிவன் கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து மாநகராட்சி சார்பில் சுமார் 63 லட்ச ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் இரவை பகலாக்கும் மின்ஓளி வசதியுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளத்தின் தென்புறம் மற்றும் வடபுறம் பள்ளம் ஏற்பட்டு தெப்பக்குளம் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று இந்துசமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களை அழைத்து மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் பழமை மாறாமல் தெப்பக்குளத்தை எப்படி சீரமைப்பது என்று ஆய்வு மேற்கொண்டனர்.     தெப்பக்குளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் பழமைமாராமல் மீண்டும் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியை துவக்குவதற்கான பணியை மாநகராட்சி மேற்கொண்டது.

இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற வேண்டும் அதற்கான அனைத்து வசதிகளும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டபோது மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியிடம் இந்துசமய அறநிலை துறை அதிகாரிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் தெப்ப திருவிழா நடத்த முடியாது ஆகையால் சீரமைப்பு பணிகளை உடனடியாக துவங்குங்கள் அடுத்த ஆண்டு சீரும் சிறப்புமாக தெப்பத் திருவிழா நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும் சிவன் கோவில் நிர்வாகமும் தெரிவித்தது.  அதன் அடிப்படையில் கடந்த பத்து நாட்களாக தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது தெப்பக்குளத்தில் இருந்த 10 அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது. 

பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதில் நவீன வசதிகளுடன் பழமை மாறாமல் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 1992ம் ஆண்டு தெப்பக்குளம் கட்டுமான பணியில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக மூன்று வருடம் தெப்ப திருவிழா நடைபெறாமல் இருந்தது. அதன் பின்பு பணிகள் எல்லாம் முடித்து தெப்ப திருவிழா நடைபெற்றது.

 அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் இரண்டு வருடம் தெப்பத் திருவிழா நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி ஏற்பட்ட பிரச்சனையால் இந்த ஆண்டு தெப்ப திருவிழா மாநகராட்சி நிர்வாகம் நடத்த முன்வந்த போதும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெப்ப திருவிழா நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்று கூறிய காரணத்தினால் மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியை உடனடியாக துவக்கியது.

எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக தெப்பக்குளம் சீர் அமைக்கும் பணிகள் பழமை வாராமல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முழுமையாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தெப்பக்குளம் சீரமைப்பு பணியை தினசரி மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version