Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக கிரிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
டிலைட் பப்ளிக் பள்ளியில் வரும் 23ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன் தலைமையில், செயலாளர் கிறிஸ்பின், பொருளாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், டிலைட் பப்ளிக் பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, டிலைட் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரபாகரன் ஜான், சேர்மன் ஜெயசீலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். வெற்றி பெறும் அணிக்கு 23ம் தேதி மாலை சிஎஸ்கே டிடீசிஏ டிராபி 2026 சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும். டோர்னமன்ட கமிட்டி ரொனால்ட் ராஜேஷ், மேற்பார்வையாளர் மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Exit mobile version