Site icon thoothukudipeople.com

உலகின் முதலாவது உள்ளரங்கு கிரிக்கெட் போட்டி:மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்!

உலகின் முதலாவது உள்ளரங்கு கிரிக்கெட் போட்டி:
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி உலக மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் டோர்னமென்ட் போட்டியை தூத்துக்குடி கோமதிபாய் காலணியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தமிழக மாற்று திறனாளிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறந்த சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாக ஏலத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டு சம பலத்துடன் மோதினர். இது உலகின் முதன்முறையாகும்.

இது ட்ரயம்ப் புக் ஆப் வல்ட்க்காட்ஸ் நிறுவனத்தாரால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை சான்றிதழ் தமிழக மாற்று திறனாளி உறவுகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக அளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு போட்டியில் ஈடுபட்டுள்ள வீரா்கள் உலக அளவில் சாதனை படைத்துகொண்டிருக்கின்றனா். அதற்கு காரணம் அரசின் ஊக்கம் தான் தேவையான உதவிகளையும் நல்ல பயிற்சியாளர்களையும் கொண்டு விளையாட்டு துறை நல்லமுறையில் செயல்படுகிறது. சாதனை செய்வதற்கு எண்ணங்களும் லட்சியமும் தான் முக்கியம் உங்களுக்கு தேவையான எந்த உதவியாக இருந்தாலும் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். இது போன்று பல்ேவறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்த வேண்டும் என்று உங்களை மனதார வாழ்த்துகிறேன் என்றாா். 

போட்டிக்கான நிகழ்ச்சிகளை டாக்டா் மகிழ்ஜான் ஒருங்கிணைத்திருந்தாா். நிகழ்ச்சியில் பல்வேறு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Exit mobile version