அமைச்சர் கீதா ஜீவனிடம் ‘கலைஞர் வரலாறு’ நூல் வழங்கப்பட்டது:துளசி சட்டக் கல்லூரி முதல்வர் நெகிழ்ச்சி!

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை, துளசி சட்டக் கல்லூரி முதல்வர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து, துளசி சட்டக் கல்லூரி முதல்வர் அவர்கள் எழுதிய நூலை அமைச்சரிடம் வழங்கினார். கலைஞரின் சாதனைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் விளக்கும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் மற்றும் பேராசிரியர் கோமதி, நம் நாடு நம் மக்கள் எதிர்காலம் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான அருணா தேவி ரமேஷ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply