Site icon thoothukudipeople.com

கனிமொழி எம்.பி பிறந்தநாள்: அங்கன்வாடிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய திமுக ஒன்றிய செயலாளா் இளையராஜா!

கனிமொழி எம்.பி பிறந்தநாளை 3 அங்கன்வாடிகளுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா அத்தியாவசிய பொருட்களை வழங்கினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுதுறை வீரா்களையும் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதே வேளையில் அவர்களுக்கு தேவையான அரசு சாா்ந்த உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் தூத்துக்குடி ெதற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஓன்றியத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவரும் தேர்தல் அறிக்கை குழு தலைவருமான கனிமொழி எம்்பி பிறந்தநாளையொட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தருவைகுளம் அருகே உள்ள கீழ அரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி வௌ்ளப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள 3 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அங்கன்வாடிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளர் இளையராஜா வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணைச்செயலாளர் வேல்ராஜ், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிட்டன், நிா்வாகிகள் பேச்சிராஜ், ஆலோசனை மாியான், மிக்கேல், அந்தோணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Exit mobile version