Site icon thoothukudipeople.com

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்ற வக்கீல் ஜோயல்!

தமிழா் திருநாளான பொங்கலையொட்டி முதல்வா் ஸ்டாலினிடம் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் வாழ்த்து பெற்றாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் திராவிட பொங்கல் விழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
அதன்படி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை மாநில திமுக இளைஞா் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் நோில் சந்தித்து வாழ்த்துக்கள் தொிவித்து வாழ்த்துக்கள் பெற்றாா்.
அப்போது முதலமைச்சா் ஸ்டாலின் கூறுகையில் திமுக தலைமைக்கு உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும். 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் திமுக 7வது முறையாக ஆட்சிஅமைக்க வேண்டும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது அறிவுரை வழங்கினாா்.

Exit mobile version