Site icon thoothukudipeople.com

2026ல் மீண்டும் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க அனைவரும் பணியாற்றிட வேண்டும்; திமுகவினருக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி புத்தாண்டில் அறிவுறுத்தல்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஓருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த குழுவில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் பாரதி, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ள நிலையில் தொகுதியில் பொறுப்பாளர்கள் களப்பணியை மேற்கொண்டுள்ளனா்.  இந்நிலையில் 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை போல்பேட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திலும் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்திலும் இதே போல் மேயர் ஜெகன் பொியசாமியையும் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் திமுகவினர் சந்தித்து வாழ்த்து தொிவித்தனர். 

அப்போது அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் கூறுகையில் “திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க பணியாற்ற வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தில் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள். அதே போல் 2024ல் நடைபெற்ற எம்பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியை  எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்ததை போல் தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். என்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறியதற்கிணங்க வரும் தேர்தலில் 6 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். அதற்கான பணிகளை முழுமையாக கடமை உணர்வோடு பணியாற்றுங்கள் என்று தொிவித்தாா்.” 

உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயா்ஜெனிட்டா, மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், தலைமை பேச்சாளா் இருதயராஜ், ஓன்றிய செயலாளா் காசிவிஸ்வநாதன், பகுதிசெயலாளா்கள் ஜெயக்குமாா், மேகநாதன், சுரேஷ்குமாா், ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version