Site icon thoothukudipeople.com

குப்பையில் கிடைத்த 3 பவுன் தங்க நகை – நேர்மையை நிரூபித்த தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பாராட்டு!

தூத்துக்குடி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில், சத்திரம் தெருவை சேர்ந்த ஒருவர் தவறுதலாக தங்களது மூன்று பவுன் நகையை கழிவு பொருட்களோடு சேர்த்து மாநகராட்சியின் திடக்கழிவு வாகனத்தில் கொடுத்துவிட்டார். பின்னர், தூய்மை பணியாளர்கள் கழிவுகளை தரம் பிரிக்கும் போது நகையை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர். இந்த நல்ல செயலுக்காக மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர், கண்காணிப்பாளரை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Exit mobile version