நிருபர்,பிரவீன்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் அறிவார்ந்த சூழல் உருவாக்கும் நோக்கில், தமிழகத்தில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும் என நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதில் ஒன்று தூத்துக்குடி மாநகராட்சியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.